புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (21:12 IST)

டன் கணக்கில் செத்துகிடக்கும் மீன்கள் – துர்நாற்றம் வீசி நோய்கள் உண்டாகும் அவலநிலை ?

கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர் பகுதியில் அமராவதி மற்றும் காவிரி ஆறுகள் ஒருங்கிணைந்து மாயனூரில் ஒன்றிணைந்த காவிரியாக மாறுவதால், இங்கேயே, மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணையும் கட்டப்பட்டு, இதே பகுதியில் கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை வாய்க்கால், தென்கரை மருதாண்டான் வாய்க்கால் என்று மூன்று வாய்க்கால்களுக்கும் உபரிநீரை காவிரி ஆறு அனுப்புகின்றது.
இந்நிலையில் பிரதான தொழிலாக சுமார் 400 குடும்பங்களுக்கு மேல், மீன்பிடித்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே, கதவணை கட்டியதால் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, அத்தொழிலில் இருந்தவர்களும் தற்போது மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த 3 மாதங்களாக மீனவர்கள், மீன்பிடிக்க தடை செய்தும், பட்டு வலைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் மீன்வளத்துறையினர் தெரிவித்த நிலையிலும், மீனவக்குடும்பங்கள் வறுமையின் விளிம்பில் தற்போது தத்தளித்து வரும் நிலையில், மூன்று வாய்க்கால்களிலிலும் நீர் வராமல், இருப்பதினால் மீன்பிடித்தொழில் மிகுந்த கவலைக்கிடமாக உள்ள நிலையில், ஆற்றில் மட்டுமே வளரும் ஆத்துக்கெளுத்திகளை பட்டுவலைகளை கொண்டு மீன்பிடிப்பு செய்தால் மீனவர்களுடைய வாழ்வு வலம்பெறும்.
 
 
ஆனால், இந்த வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததினால் குட்டைகளில் வளராத குணம் கொண்ட 3 இன்ச் மட்டுமே வளரும் தன்மை கொண்ட இந்த மீன்களை உடனே பிடித்தால் உயிருடன் விலை போகும், ஆனால் நீரோட்டம் இல்லாமல் குட்டைகளாக மாறினால் இந்த மீன்கள் தானாக இறந்து விடும் இயல்பும் கொண்ட இந்த மீன்களை அப்போதே பிடிக்க வேண்டும், இதை பிடிக்க பட்டு வலைகள் மட்டுமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நிலையில் தற்போது பல ஏக்கர் கணக்கில் வற்றிப்போன, வாய்க்கால்களில் பல டன் கணக்கில் மீன்கள் செத்துக்கிடக்கின்றன என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் அப்பகுதி மீனவர்கள், ஆகவே, இந்த மீன்கள் இறப்பதற்கு சில மணி நேரத்தில் அந்த பட்டுவலைகளை கொண்டு மீன்பிடிக்கப்பட்டிருந்தால், அதை மனிதர்களுக்கு உணவாகி இருக்கும், இப்படி டன் கணக்கில் செத்து துர்நாற்றம் வீசி இருக்காது ஆகவே, பட்டுவலைகளை உபயோகப்படுத்தி தொழில் செய்ய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.