1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (20:07 IST)

13 வயதில் இருந்தே டார்ச்சர்.. பிரபல நடிகையின் உருக்கமான டிவிட்

நடிகை சங்கீதா, பாடகர் கிரிஷை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது விஜய் ஆண்டனி படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கிறார். 
 
இப்படி இருக்க, சங்கீதாவின் தாயார் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்று கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த புகாரில் அவர், சங்கீதா தன்னை வீட்டை விட்டு துரத்திவிட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். 
 
இதனால், சமூக வலைத்தளங்கலில் சங்கீதா மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த விமர்சனக்களுக்கும், அவரது தாயார் போலீஸில் அளித்த புகாருக்கு பதில் அளித்துள்ளார். போலீஸாரிடம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட வீடு எனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது. அதில் எனக்கு மட்டுமே முழு உரிமையுள்ளது. அந்த வீட்டை எனது தாயார் என் சகோதரர்களுக்கு பிடுங்கி தர திட்டமிடுவதாக விளக்கமளித்தார். 
அதோடு, சமூக வலைத்தளத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு, 13 வயதிலேயே என்னை பள்ளியில் இருந்து நிறுத்தி வேலைக்கு அனுப்பினீர்கள். என்னிடம் பல பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளீர்கள்.
 
குடிக்கும் போதைக்கும் அடிமையான உங்கள் மகன்களுக்காக என்னை என்னை சுரண்டினீர்கள். நானாக போராடி வெளியேறும் வரை எனக்கு திருமணம் செய்யவில்லை. 
 
மேலும், என் கணவரை தொல்லை செய்து என் குடும்ப அமைதியை கெடுத்தீர்கள். இப்போது பொய் புகார் அளித்துள்ளீர்கள். உங்களால்தான் நான் சாதாரண குழந்தையாக இல்லாமல் இப்போது போராளியாக நிற்கிறேன். அனைத்திற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.