Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்?

Written By Siva
Updated: ஞாயிறு, 5 மே 2024 (13:15 IST)
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

12ஆம் வகுப்பு உள்பட பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் பள்ளி கல்வித்துறை அதை மறுத்துவிட்டது என்பதும் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நாளை 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதை தேர்வுத்துறை உறுதி செய்து உள்ள நிலையில் இந்த தேர்வு முடிவுகளை நாளை காலை 9.30 மணிக்கு இரண்டு இணையதளங்களில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது

12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தங்களுடைய முடிவுகளை  http://tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in ஆகிய இரண்டு இணையதளங்களில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளுக்கு அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் வரும் என்பதும் தெரிந்தது.

Edited by Siva

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments