ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு கட்டமாக நடந்தது என்பதும் வாக்குப்பதிவின் போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன என்பதும் தெரிந்ததே.
எந்தவிதமான பெரிய அசம்பாவிதங்கள் இல்லாமல் இரண்டு கட்டமாக 9 மாவட்டங்களில் தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் அதிமுக திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு நாள்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.
வாக்கு என்னும் இடங்களில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் ஏஜென்ட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
மேலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை சிசிடிவி கேமரா மூலம் வீடியோ எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது