வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (10:58 IST)

அப்ப அத்தனையும் கவரிங்கா?? – வாக்காளர்களுக்கு விபூதி அடித்த வேட்பாளர்!

குன்றத்தூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு கவரிங் தங்க காசுகளை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பல்வேறு கட்சியினரும் போட்டியிட்ட நிலையில் பல இடங்களில் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக பரிசு பொருட்கள் வழங்கியதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் குன்றத்தூர் ஒன்றியம் கொழுமணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு தங்க நாணயம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதுவும் சரியாக தேர்தல் நடக்கும் அன்று அவர் வழங்கிய நிலையில் மக்கள் அதை விற்க நகைக்கடைக்கு சென்றபோது அது கவரிங் என தெரியவர அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம்.

இதுபற்றியறிந்த மற்ற கட்சி வேட்பாளர்கள் ஊராட்சி ஒன்றிய தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.