1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (15:05 IST)

தமிழத்தில் இன்னும் சிறிது நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

rain
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் உள்பட ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
நாளை தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏப்ரல் 13-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது
 
ஏப்ரல் 14ஆம் தேதி கன்னியாகுமரி தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களிலும் 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது