திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்: இன்றைய உயர்வு எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
தமிழகத்தில் பெட்ரோல் விலை இன்று 28  காசுகள் அதிகரித்து உள்ளது இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.18 என விற்பனையாகி வருகிறது 
 
அதே போல் தமிழகத்தில் இன்று டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.95.33 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்