தீபாவளி தினத்தில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை இன்று கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் இன்று எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அதேபோல் இன்றும் மாற்றம் இல்லை
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 என விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் ஏராளமான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதால், ஒபெக் பிளஸ் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தாலும் இந்தியாவில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது
Edited by Siva