1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (07:48 IST)

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

petrol
சென்னையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி ஏற்ப இன்னும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்து மக்களுக்கு சலுகை செய்ய வேண்டுமென அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.