1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (11:58 IST)

இன்னும் நிறைய சம்பவங்கள் செய்ய போறோம்! – சென்னை தின விழாவில் முதல்வர் பேச்சு!

இன்று சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு இடங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

வணிகத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்டு 22ம் தேதி 1639ம் ஆண்டில் சென்னப்பட்டிணத்தை விலைக்கு வாங்கியது. அன்று முதல் மதராசப்பட்டிணம் என்றும் சென்னப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டு வந்த சென்னை நகரம் தோன்றியது.

அதை சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு 22ம் தேதி “சென்னை தினம்” கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை தினத்தையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பல வகையான சிறப்பு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை தின விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “பிரிட்டிஷ்காரர்கள் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக மாற்றியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இன்று சென்னைக்கு 383வது பிறந்தநாள். தமிழக அரசின் திராவிட மாடலுக்கு மிக சிறந்த உதாரணமாக சென்னை நகரம் விளங்கி வருகிறது. நீங்கள் எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப்போகிறோம். காத்திருங்கள்” என பேசியுள்ளார்.