சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 2 பெண்கள் பரிதாப பலி!
சென்னை அசோக் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
அசோக் நகர் அடுக்குமாடி குடியிருப்பு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்
தீ விபத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணின் பெயர் ஜானகி என்றும் அவருக்கு 93 வயது என்ரும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் பலியான இன்னொரு பெண் செவிலியர் என்று கூறப்படுகிறது.
சமையலறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் இரு பெண்களும் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.