திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (11:13 IST)

அர்ச்சகர்கள் நியமனம் செல்லும்: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

archagar
அர்ச்சகர்கள் நியமனம் செல்லும் என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அரசு விதிகள் செல்லும் என்று விதிகளை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் ஆகம விதிகள் பின்பற்றப் படுகிறதா என்பதை கண்டறிய ஐவர் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
மேலும் எந்தெந்த கோயில்களில் எந்தெந்த ஆகம விதிகள் பின்பற்றப் படுகின்றன என்பதை கண்டறிய இந்த ஐவர் குழு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அர்ச்சகர்கள் பல விதிகளை எதிர்த்த வழக்கில் இதன்மூலம் முடித்து வைக்கப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது