ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2022 (08:57 IST)

123 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

கடந்த 122 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்று123வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்றுடன் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவடைந்ததை அடுத்து இன்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதன் காரணமாக இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
123 நாட்களாக பெட்ரோல் விலை உயரவில்லை என்றாலும் விரைவில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது