ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (10:46 IST)

தேங்கி கிடக்கும் முட்டைகள்... மீண்டும் குறைந்தது விலை!

முட்டை விலை ஒரே நாளில் மீண்டும் 20 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
 
தமிழகம், கேரளாவிலும் முட்டை விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்து முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், பிற மண்டலங்களிலும் விலை கடுமையாக குறைந்துவருவதாலும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
இந்நிலையில் நேற்று மீண்டும் 20 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவரை 13 நாட்களில் 70 காசுகள் வரை விலை குறைந்துள்ளது. முன்னதாக நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 3 ரூபாய் 80 காசுகளில் இருந்தது.