சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதற்கு ஒரே காரணம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து 30 சதவீதம் சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்களை வாங்கி குவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இதன் காரணமாக இந்தியாவில் வரும் டிசம்பர் வரை பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
Edited by Siva