Daily Horoscope

சென்னை திரும்புகிறார் ரஜினி: அரசியல் அறிவிப்பு எப்போது?

Updated: வெள்ளி, 4 மே 2018 (14:39 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் 23ஆம் தேதி அமெரிக்காவுக்கு உடல்பரிசோதனை செய்ய சென்றார் என்பது தெரிந்ததே. அவர் அமெரிக்காவில் பத்து நாட்கள் இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இன்று இரவு சென்னை திரும்பவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அமெரிக்காவில் உடல்நல பரிசோதனை மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் அவர் இருக்கும்போது வெளிவந்த ஸ்டைலான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று இரவு சென்னை திரும்பும் ரஜினி, விரைவில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments