திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 மே 2018 (23:36 IST)

சென்னை அணியை எளிதில் தோற்கடித்த கொல்கத்தா

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில் சென்னை அணியை கொல்கத்தா மிக எளிதில் வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்கள் அடித்தது.
 
178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. லின், நரேன், உத்தப்பா ஆகிய முக்கிய விக்கெட்டுக்கள் வீழ்ந்த நிலையில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி 17.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி மொத்தம் 10 புள்ளிகளை பெற்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.