திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (12:28 IST)

இப்படியே போனா என்ன பண்றது? - மீண்டும் அதிகரித்த தங்கம் விலை!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புகளால் பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து சவரன் ரூ.40,384 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.17 அதிகரித்து ரூ.5,048 ஆக விற்பனையாகி வருகிறது.