1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (12:45 IST)

ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! சுற்றி வளைக்கப்படும் ரௌடிகள்; சென்னை போலீஸ் அதிரடி!

தூத்துக்குடியில் ரௌடி ஒருவரை பிடிக்க சென்ற காவலர் குண்டு வெடித்து இறந்த நிலையில் தொடர்ந்து ரௌடிகள் கைது செய்யப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்து என்பவரை கைது செய்ய காவலர்கள் தேடியபோது துரைமுத்து வீசிய குண்டு வெடித்ததில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். துரைமுத்துவும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தார்.

இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் பிரபல கஞ்சா வியாபாரியான ரௌடி சங்கர் என்பவரை போலீஸார் கைது செய்ய முயன்றபோது சங்கர் அரிவாளால் காவலர் ஒருவரை வெட்டியதால், போலீசார் சங்கரை என்கவுண்ட்டர் செய்தனர்.

தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்களை தொடர்ந்து வேளச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி திருவெங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமண விழா ஒன்றிற்கு வந்த திருவெங்கடத்தை சுற்றி வளைத்து கைது செய்த போலிஸார் பழைய குற்ற வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை தொடர்ந்து மேலும் பல ரௌடிகளை போலீஸார் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.