சின்னத் தல சுரெஷ் ரெய்னாவை பாராட்டிக் கடிதம் எழுதிய பிரதமர் !

Suresh Raina
sinoj| Last Updated: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:36 IST)

இந்திய
கிரிக்கெட்
வீரர்
எம்.எஸ்.தோனி
சர்வதேச
கிரிக்கெட்
போட்டிகளிலிருந்து
ஓய்வு
பெறுவதாக
அறிவித்துள்ள
நிலையில்
பிரதமர்
மோடி
கடிதம்
எழுதினார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆகஸ்டு 15 அன்று அவரது முடிவை அவர் அறிவித்த நிலையில் அவரது கிரிக்கெட் பயணத்தை வாழ்த்தி பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தோனிக்கு ஃபேர்வெல் ஆட்டம் நடத்துவது குறித்து பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் தோனி கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி என புகழ்ந்துள்ளார். மேலும் தோனியின் திடீர் ஓய்வு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய அவர் தோனி ஓய்வு அறிவித்ததால் இந்தியாவின் 130 கோடி மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்,

இதற்கு தோனி, நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் தோனி ஓய்வு அறிவித்த அன்றே தனது ஓய்வு குறித்தும் அறிவித்த சுரேஷ் ரெய்னாவுக்கும் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நீங்கள் வாழ்வில் கடினமான முடிவை எடுத்துள்ளீர்கள், அதை ஓய்வு என நான் கூறமாட்டேன். நீங்கள் இளமையானவர், இந்தக் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு அற்புதமான அடுத்த இன்னிங்ஸை நீங்கள் ஆரம்பிக்கத் தயாராகியுள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துக் கூறியுள்ள ரெய்னா, நாட்டு மக்களாலும் நாட்டின் பிரதமாராலும் அன்புகாட்டப்படுவதை விட பெரிய பாராட்டு எதுவும் இல்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :