செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

9 மணிக்கு தீர்ப்பு, 9.15 மணிக்கு அதிமுக பொதுகுழு: கியூ.ஆர். கோடு அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி

admk gb2
9 மணிக்கு தீர்ப்பு, 9.15 மணிக்கு அதிமுக பொதுகுழு: கியூ.ஆர். கோடு அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு சென்னை ஐகோர்ட் வழங்க உள்ள நிலையில் 9. 15 மணிக்கு சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டிலிருந்து சற்று முன் சென்னை வானகரம் புறப்பட்டு உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் புகைப்படம் மற்றும் கியூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே பொதுக்குழுவுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அதிமுக பொதுக்குழு வரவேற்பு பதாகைகள் ஈபிஎஸ் படம் மட்டுமே உள்ளது என்றும் ஓபிஎஸ் படம் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் நடந்த பொதுக்குழுவின் போது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு தரப்பு படங்கள் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.