வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 9 ஜூலை 2022 (16:35 IST)

ரேசன் கடைகளில் குறை தீர்ப்பு முகாம்!

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் குறை தீர்ப்பு முகாம்  இன்று முதல் நடபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாதமும் குறை நீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில்,  குடிமக்கள் சேவைகள் உறுதி செய்யும் நடவடிக்கைகள்  எடுக்கப்படும்.

இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான முகாம் நடந்து வருகிறது. இந்த நிலையில்,  ரேசன் கடைகளில் பொருட்களை நேரில் வருகை தர இயலாதார்கள், மூத்த குடிமக்களுக்கு அங்கீகரச் சான்று வழங்கப்படுகிறது.

இந்த முகாமில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவ்ரி மாற்றம் கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு கோரும் மனுக்கள்  பதிவு செய்தல் உள்ளிட்டசேவைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.