தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரசால் தினந்தோறும் தாக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலை அறிவித்து வரும் நிலையில் சற்று முன் அறிவித்த தகவலின் படி தமிழகத்தில் இன்று மட்டும் 43 பேர்களுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்று ஒரு மருத்துவர் உள்பட 2 பேர் இன்று உயிரிழந்தனர் என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் 6109 பேருக்கு இன்று கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதுவரை தமிழகத்தில் மொத்தம் 41,710 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்று கொரோனாவில் இருந்து 46 பேர் குணமடைந்து உள்ளதை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 457 கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது