53 பத்திரிக்கையாளருக்கு கொரோனா! மும்பையில் பரபரப்பு!
மும்பையில் 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையோ 500 ஐக் கடந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உடனுக்கு உடன் செய்திகளை வழங்க ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் இரவு பகல் பாராது வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி 53 பத்திரிகையாளர்களில் நிருபர்கள் மற்றும் கேமராமேன்கள் பலர் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் மும்பையில் 2,700 க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிராவில் 4,203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.