தமிழகத்தில் முழு ஊரடங்கு: அவசர தேவைக்கு புதுவை செல்லும் பொதுமக்கள்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு: அவசர தேவைக்கு புதுவை செல்லும் பொதுமக்கள்!
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அவசர தேவைக்கு புதுவை மாநிலத்திற்கு சென்று பொதுமக்கள் பொருட்கள் வாங்கி வரும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது என்பதும் ஆனால் அதே நேரத்தில் 10 அடி இடைவெளி விட்டு உள்ள புதுவை எல்லையில் அனைத்து கடைகளும் திறந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
புதுவை மாநிலத்தில் ஞாயிறன்று முழு ஊரடங்கு இல்லை என்பதால் அனைத்து கடைகளும் திறந்திருப்பதால் புதுவை எல்லையில் உள்ள தமிழக மக்கள் எல்லை தாண்டி, எல்லையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பையும் தாண்டி அவசர தேவைக்கு புதுவையில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது