செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஏப்ரல் 2022 (12:48 IST)

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசும் புறக்கணிப்பு!

Governor
தமிழக ஆளுநர் இன்று அழைக்கும் தேனீர் விருந்தில் ஏற்கனவே ஒருசில அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறிய நிலையில் தற்போது தமிழ்நாடு அரசும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
 
தமிழக ஆளுநரின் தேநீர் விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்த நிலையில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
 
 நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்பை குலைக்கும் வகையில் மாநில ஆளுநர் நடந்து கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .
 
முன்னதாக சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவியைஅமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் சந்தித்து நீட் விலக்கு மசோதா தொடர்பாக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.