திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (10:00 IST)

தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் கட்சிகள்!

தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் என்.ஆர்.ரவி அளிக்கவிருக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
ஆம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் என்.ஆர்.ரவி அளிக்கவிருக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
 
தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சனை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.