சென்னையில் நாளை தனியார் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட இருப்பதை அடுத்து வேலையில்லாத இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் தமிழக அரசின் சார்பில் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாளை அதாவது ஜனவரி 20ஆம் தேதி சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
ஆலந்தூரில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு முதல் பட்டம் படித்தவர்கள் வரை இந்த வேலைவாய்ப்பில் பங்கு கொள்ளலாம் என்றும் பணி நியமனம் பெற்றாலும் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு எந்த விதமான கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva