புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (08:07 IST)

கருத்தடை செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை: தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவு!

கருத்தடை செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து அந்த குழந்தைக்கு வருடந்தோறும் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்ற பகுதியை சேர்ந்த தனம் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்தார். இதன் பின்னர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததாகவும் எனவே தனக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பின்னரும் குழந்தை பிறந்ததால் இழப்பீடு கேட்க பெண்ணுக்கு உரிமை உள்ளது என்று கூறியதோடு, அந்த குழந்தையின் பட்டப்படிப்பு வரை மாதம் பத்தாயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது