வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (00:03 IST)

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி ரீலிஸ்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிலம்பரசன். இவர் தற்போது முன்னணி நடிகராகவுள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்தாண்டு மாநாடு, ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள்  காமன் டிபி வெளியிட்டு வருகின்றனர். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டுடியோ கிரீன்  நிறுவனம் பத்துதல படத்தின் 2வது போஸ்டரை வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.