வேல் யாத்திரைக்கு தடா; குடமுழுக்கு விழாக்கு ஒகே: பாஜகவை வச்சு செய்யும் அதிமுக!
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி.
தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் தொடர்ந்து திருத்தணி, திருவொற்றியூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வேல் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக தொடர்ந்த வழக்கிலும் உயர்நீதிமன்றம் பாஜகவிடன் அடுக்கான கேள்விகளை கேட்டதுடன், பக்தி யாத்திரை என்று அரசியல் யாத்திரை செய்வதாக அளிக்கப்பட்ட டிஜிபி அறிக்கையின் பேரில் கண்டித்தது.
இந்நிலையில் தாங்கள் பின்வாங்க போவதில்லை என கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் எதிர்வரும் 17 ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடங்கும் என்றும், இந்த வேல் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. அதாவது, கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.