1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2022 (20:42 IST)

மருத்துவமனையில் கக்கன் மகன்: செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு!

kakkan son
மருத்துவமனையில் கக்கன் மகன்: செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு!
காமராஜர் காலத்தில் அமைச்சராக இருந்த கக்கன் அவர்களது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது மருத்துவ செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கியநாதன் என்பவர் இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
அவர் ஏழ்மை காரணமாக மருத்துவ செலவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதை அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகன் பாக்கியநாதன் அவர்களின் மருத்துவ செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என கூறியுள்ளார் 
 
மேலும் அவருக்கு அரசு செலவில் தரமான சிகிச்சை இலவசமாக அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்