செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (21:09 IST)

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

bharathiraja
இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மருத்துவமனை அவருடைய உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது
 
அந்த அறிக்கையில் இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாகவும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பாரதிராஜாவுக்கு தற்போது சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து பாரதிராஜா இன்னும் ஒரு சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது