வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:16 IST)

தமிழ்நாட்டை இனி வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டை இனி இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களோடு ஒப்பிடாமல் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ஒப்பிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் இன்று பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சிறப்பாக செயல்படுகிறோம் என்ற மனநிலையை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழ் நாட்டின் வளர்ச்சியை மற்ற மாநிலங்களுடன் இனி ஒப்பிடாமல் வளர்ந்த மற்ற நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
முதல்வரின் இந்த கருத்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது