வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:40 IST)

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் தொட்டுள்ள நிலையில் மாநில முதல்வர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 8 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 1.50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கொரொனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொலி வாயிலாக இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதில் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.