வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 மே 2020 (06:24 IST)

முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கு கொரோனா!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வீட்டில் பாதுகாப்புப் பிரிவு காவல் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த பாதுகாப்பு பிரிவு பெண் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால் அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அவர் முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணியில் இருந்து விடுமுறையில் சென்றதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெண் காவலருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
ஒரு வாரத்திற்கு முன்னரே முதல்வர் வீட்டில் இருந்து அவர் விடுமுறையில் சென்று விட்டதால் முதல்வர் வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இருப்பினும் முதல்வர் வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது