வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 6 மே 2020 (15:42 IST)

ஊரடங்கு நிலை நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் அழிந்துவிடும் - புதுவை முதல்வர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட்ரோர் எண்ணிக்கை 49,391 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14, 183 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1694 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ள நிலையில், ஊரடங்கு நீடித்தால் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

ஊரடங்கு நீட்டிப்பில் மாநில முதல்வர்களைக் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும். இல்லை என்றால் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசு கொடுக்க வேண்டும். மே 17க்குப் பிறகு ஊரடங்கு நிலை நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.