செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 மே 2020 (08:00 IST)

மீராமிதுனின் ஆபாச புகைப்படம்: முதல்வர், பிரதமருக்கு பறந்த புகார்

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான மீராமிதுன் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆபாசமான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வந்துள்ளார் என்பதும் இதற்கு ரசிகர்களிடமிருந்து வரவேற்பும், சமூக ஆர்வலர்களிடம் இருந்து கண்டனமும் எழுந்துள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் டுவிட்டர் பயனாளி ஒருவர் மீராமிதுன் யோகா செய்ய புகைப்படம் ஒன்றை மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆபாசமான கமெண்ட் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
 
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மீராமிதுன் சமூகவலைதளத்தில் எத்தனையோ நடிகைகள் இருந்தும் தனக்கு மட்டும் இந்த மாதிரி நடப்பது ஏன் என்று புரியவில்லை என்றும் இது குறித்து அரசுக்கு ஏற்கனவே புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் அவர் இந்த டுவிட்டை முதல்வருக்கும் பிரதமருக்கும் அவர் டேக் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மீராமிதுனின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதால் இதுகுறித்து அரசு அதிரடியாக நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்