1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (18:12 IST)

ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி: முதல்வர் பழனிசாமி

ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
முக ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு உள்ளது என்றும், இந்த வழக்கு முடிவுக்கு வந்தால் 6 வருடத்திற்கு ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 
மேலும் என்னை குறை கூறினால்தான் ஸ்டாலினுக்கு தூக்கம் வரும் என்றும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தை சந்தேகப்படுவதா? என ஆவேசம் கொண்ட முதல்வர் எடப்பாடியார், மனிதாபிமானம் இல்லாத மனிதராக எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார் என்றும் மரணத்தில் அரசியல் செய்வது மிக மிக வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.