புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (14:46 IST)

7.5% உள் ஒதுக்கீடு: சிறிது நேரத்தில் கவர்னரை சந்திக்கின்றார் முதல்வர்

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மசோதா சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த மசோதா அமல் செய்யப்பட கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.இந்த நிலையில் கவர்னர் இன்னும் இது குறித்து முடிவு எடுக்காமல் உள்ளார்.7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என திமுக உள்பட அரசியல் கட்சிகள் அழுத்தம் தெரிவித்து வருகின்றன, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து ஆளுநரிடம் அவர் நேரில் பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன