தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் பெற்றவர்களின் விபரங்கள்

Last Modified செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (23:40 IST)
கலைத்துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு கலைமாமணி விருது அளித்து தமிழக அரசு பெருமைபடுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டு 201 கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்துள்ளது.

திரைப்பட நடிகர்களான விஜய்சேதுபதி, பிரபுதேவா, சசிகுமார், காஞ்சனா தேவி, குட்டிபத்மினி, நளினி, பிரியா மணி ஆகியோர்களுக்கும், இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களுக்கும், நகைச்சுவை நடிகர்களான பாண்டு, டி.பி.கஜேந்திரன், சிங்கமுத்து, சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சூரி, தம்பிராமையா ஆகியோர்களுக்கும், கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
மேலும் எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், திருப்பூர் கிருஷ்ணன், வாசுகி கண்ணப்பன் ஆகியோர்களுக்கும், மிருதங்கம், நாதஸ்வரம், பரதநாட்டியம், கரகாட்டம், வீணை, சொற்பொழிவு, காவடி, பொம்மலாட்டம், பம்பை வாத்தியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு விருது மற்றும் 3 சவரன் பொற்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


இதில் மேலும் படிக்கவும் :