தேசிய விருது பெற்றது கூட தெரியாமல் காஷ்மீரில் சிக்கி தவிக்கும் சிறுவன்

hamid
Last Modified திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (12:58 IST)
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றும் அதை தெரிந்து கொள்ள முடியாமல் காஷ்மீரில் சிறுவன் ஒருவன் இருப்பது படக்குழுவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்யும் தீர்மானத்தால் காஷ்மீரில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பல்வேறு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இறங்கினர். தொலைத்தொடர்பு, டிவி, ரேடியோ சேவைகள் காஷ்மீரில் துண்டிக்கப்பட்டன.

இந்நிலையில் சமீபத்தில் இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ”ஹமீத்” என்னும் திரைப்படத்தில் நடித்த சிறுவன் தல்ஹா அர்ஹத் ரேஷிக்கு அறிவிக்கப்பட்டது.

நோயால் இறக்கும் தருவாயில் இருக்கும் தன் தந்தையை காப்பாற்ற கடவுளுக்கு போன் செய்து உதவி கேட்கும் ஹமீத் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தல்ஹா அர்ஹத்.

hamid

தல்ஹா அர்ஹத் காஷ்மீரில் வசித்து வருகிறார். தற்போது அங்கு தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் படக்குழுவினரால் தல்ஹா அர்ஹத்தையோ அவரது குடும்பத்தினரையோ தொடர்பு கொள்ளமுடியவில்லை. நாட்டின் மிகப்பெரிய விருதை சிறு வயதிலேயே பெற்றும் அதை தெரிந்துகொள்ள முடியாத சூழலில் இருக்கிறார் அந்த சிறுவன்.இதில் மேலும் படிக்கவும் :