விஜய் சேதுபதி யோசித்துப் பேசவேண்டும் – அமைச்சர் மாபா பாண்டியராஜன் கருத்து !

Last Modified திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (14:09 IST)
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசிய நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழக அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மற்றும் காஷ்மீரை இரண்டாகப் பிரித்தது என மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராகப் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்டு பேசும்போது இதற்கு எதிராக தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

அதில் ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு எதிரானது. முக்கியமாக பெரியார் அன்றே சொல்லிவிட்டார். அந்தந்த மக்கள் பிரச்னையை அந்தந்த மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். உங்கள் வீட்டு பிரச்சனை உங்களுக்குத்தான் தெரியும். நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆளுமை செலுத்த முடியாது.’ எனத் தெரிவித்தார். விஜய் சேதுபதியின் பேச்சுக்குப் பலரும் பாரட்டு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் எதிரானக் கருத்தைப் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நாட்டுப்புற கலை விழாவில் பங்கேற்ற அவர், ’ காஷ்மீர் விவகாரத்தில் அதன் பின்புலத்தைத் தெரிந்துகொண்டு நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவிக்க வேண்டும். அவர் போன்ற போன்ற பிரபலங்கள் இந்த விவகாரத்தில் ஆழ்ந்து யோசித்து பேச வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :