சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது!
வருகிற ஏப்ரல் 6-ந்தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பரப்புரையில் கட்சி வேட்பாளர்கள் முழு வீச்சில் இறங்கியுள்ள நிறையில் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கொரோன தொற்று பரவலால் தேர்தல் ஆணையம் இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது.
முதியவர்களிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறப்படுகிறது. 15 தபால் ஓட்டுக்களுக்கு ஒரு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில், 80 வயது மேல் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் உள்ளிட்டோருக்கு தபால் ஓட்டு அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.