செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 மே 2020 (11:31 IST)

அண்ணே வாங்க! உங்களுக்காகதான் வெயிட்டிங்! – கைதட்டி வரவேற்கும் குடிமகன்கள்!

தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்து பல நாட்கள் கழித்து மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மது பிரியர்கள் கடை திறப்பிற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் 43 நாட்களாய் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கி செல்கின்றனர்.

பல இடங்களில் ஒருவருக்கு ஒரு மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும் என விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்போரூர் பகுதியில் மதுக்கடைகள் திறக்கும் முன்னரே காலையிலிருந்தே மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. மதுக்கடையை திறக்க வந்த ஊழியரை மதுப்பிரியர்கள் கைத்தட்டி வரவேற்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.