33% பணியாளர்களுடன் கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி!
மே 4ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட போதிலும் ஊரடங்கு உத்தரவு போன்றே தமிழகத்தில் எந்த பகுதியிலும் தெரியவில்லை. பேருந்துகள் ரயில்கள் தவிர மற்ற அனைத்தும் கிட்டத்தட்ட இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. கடைகள் திறக்கப்பட்டு கடைவீதிகளில் பொதுமக்கள் சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர் குறிப்பாக இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டதால் டாஸ்மாக்
கடைகளில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளும் திறந்துவிட்டதால் மது வாங்க திருவிழா கூட்டம் போல் மதுக்கடைகள் முன் இருப்பதால் சமூக விலகல் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இதனை அடுத்து டாஸ்மாக்கை அடுத்து கோவில்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
டாஸ்மாக் திறக்கும் தமிழக அரசு கோவில்களையும் பள்ளிகளையும் ஏன் தரக்கூடாது என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் 33 சதவீத பணியாளர்களுடன் கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதித்து உள்ளதாகவும் இதனை அடுத்து விரைவில் அனைத்து கோயில்களும் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.