Daily Horoscope
✕

திருப்பதி தரிசனத்திற்கு ரூ.300 டிக்கெட்! – தொடங்கியது முன்பதிவு!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (10:15 IST)
திருப்பதியில் ஜனவரி மாத தரிசனத்திற்கான முன்பதிவுகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக தினசரி தரிசனத்திற்கு குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சிறப்பு தரிசனம், வழக்கமான தரிசனம் உள்ளிட்டவற்றிற்கு முன்பதிவு செய்வதுடன் தடுப்பூசி சான்றிதழும் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் 12ம் தேதி வரை ஒரு நாளைக்கு 12,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

எல்லாம் காட்டு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!. இன்று வாக்கு எண்ணிக்கை!..

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி!.. ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய்!...

நேப்பியர் பாலத்துக்கு கீழ தொங்க விடுவாரு!.. விஜயை கலாய்த்த மேயர் பிரியா...

ஆண்ட்ராய்டு குரோம் பயனர்களுக்கு கூகுள் ஜெமினியின் புதிய வசதி அறிமுகம்! சூப்பர் தகவல்..

மதுராந்தகம், தாராபுரம் நாளை வாக்கு எண்ணிக்கை!.. வெற்றி யாருக்கு?..

அடுத்த கட்டுரையில்
Show comments