செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (10:13 IST)

திருப்பதி தரிசனத்திற்கு ரூ.300 டிக்கெட்! – தொடங்கியது முன்பதிவு!

திருப்பதியில் ஜனவரி மாத தரிசனத்திற்கான முன்பதிவுகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக தினசரி தரிசனத்திற்கு குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சிறப்பு தரிசனம், வழக்கமான தரிசனம் உள்ளிட்டவற்றிற்கு முன்பதிவு செய்வதுடன் தடுப்பூசி சான்றிதழும் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் 12ம் தேதி வரை ஒரு நாளைக்கு 12,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது.