1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (10:15 IST)

ஓசியில் வாட்டர் பாட்டில் கேட்ட இளைஞர் - குமுறி கூர் கட்டிய ஒயின்ஷாப் ஓனர்!

மதுரை மாநகர் பீ.பீ.குளம் அருகேயுள்ள அரசு மதுபான கடைக்கு  மதுரை மீனாம்பாள்புரம் புலித்தேவன் தெரு பகுதியை சேர்ந்த இளைஞர் பிரவின்குமார் என்பவர் சென்று அங்கு வாட்டர் பாட்டில் ஒன்றை எடுத்துசென்றுவிட்டு பணம் தர மறுத்துள்ளார்.
 
அப்போது பணம் இல்லமால் வாட்டர் பாட்டிலை தருமாறு கூறிய இளைஞர் பிரவீன்குமார் கேட்டுகொண்டிருந்தபோது  மதுபானகடை பாரின் உரிமையாளர் பிரேம்குமார் மற்றும் ஊழியர்களான சேகர், சோணைமுத்து ஆகியோர் பிரவீன்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இளைஞரின் மூன்று பல் உடைந்து காயம் ஏற்பட்டு ரத்தம் வர தொடங்கிய நிலையில் இதனைத் தொடர்ந்து பிரவீன்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
இது குறித்த இளைஞர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் பார் உரிமையாளரும் திமுக நிர்வாகிகளுமான பிரேம்குமார்(29), சேகர்(55), சோணை(29) ஆகிய மூன்று பேரையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரையில் அரசு டாஸ்மாக்கில் ஓசியில் வாட்டர் பாட்டில் கேட்டதாக கூறி இளைஞரை தாக்கிய மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.