1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:46 IST)

தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Train
தைப்பூச திருநாளை முன்னிட்டு அரக்கோணம் முதல் திருத்தணி வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
நாளை மறுநாள் அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாட இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் ஏராளமாக குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு அரக்கோணத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து அரக்கோணம் வரும் பக்தர்கள் அரக்கோணத்தில் இருந்து இந்த சிறப்பு ரயில் மூலம் திருத்தணிக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை தைப்பூச திருவிழாவுக்கு திருத்தணி வரும் பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran